/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கே.வி., பள்ளிகள் இடையே சென்னை மண்டல கிரிக்கெட்
/
கே.வி., பள்ளிகள் இடையே சென்னை மண்டல கிரிக்கெட்
ADDED : ஆக 02, 2024 07:13 AM

கல்பாக்கம் : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, சென்னை மண்டல கிரிக்கெட் போட்டிகள், கல்பாக்கத்தில், கடந்த ஜூலை 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடந்தன.
இதில், 14 வயது மற்றும் 17 வயது கிளஸ்டர் என, இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 'லீக்' மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுவிளையாடினர்.
இதில், 17 வயதிற்குட்பட்ட கிளஸ்டர் பிரிவில், ஆவடி கிளஸ்டர் முதலிடமும், சென்னை கிளஸ்டர் இரண்டாமிடமும், மதுரை கிளஸ்டர் மூன்றாமிடமும் வென்றனர்.
பின், 14 வயதிற்குட்பட்ட பிரிவில், தஞ்சாவூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதலிடமும், ஆவடி சி.ஆர்.பி.எப்., பள்ளி இரண்டாமிடமும், கோயம்புத்துார் கேந்திரிய வித்யாலயா பள்ளி மூன்றாமிடமும் வென்றன.