/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுச்சேரி சாலைக்கு நிலம் கையகம் செப்., 19, 20ல் விசாரணை கூட்டம்
/
புதுச்சேரி சாலைக்கு நிலம் கையகம் செப்., 19, 20ல் விசாரணை கூட்டம்
புதுச்சேரி சாலைக்கு நிலம் கையகம் செப்., 19, 20ல் விசாரணை கூட்டம்
புதுச்சேரி சாலைக்கு நிலம் கையகம் செப்., 19, 20ல் விசாரணை கூட்டம்
ADDED : செப் 13, 2024 10:06 PM
மாமல்லபுரம்,:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைக்கு, தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டது குறித்து, வரும் 19, 20ம் தேதிகளில், விசாரணை கூட்டம் நடத்தப்படுவதாக, தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாமல்லபுரம் - புதுச்சேரி வழித்தடத்தை, தேசிய நெடுஞ்சாலை - 332ஏ என, கடந்த 2018ல் மத்திய அரசு அறிவித்தது. இத்தடம் நான்கு வழிப்பாதையாக, தற்போது மேம்படுத்தப்படுகிறது.
சாலை விரிவாக்கத்திற்காக, திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட மாமல்லபுரம், பூஞ்சேரி, கடம்பாடி, மணமை, குன்னத்துார், நெய்குப்பி, விட்டிலாபுரம், புதுப்பட்டினம், வாயலுார் ஆகிய பகுதிகளில், தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட கடலுார், வடபட்டினம், முகையூர் ஆகிய இடங்களிலும், தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1956ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படி, இந்திய அரசிதழில், கையகப்படுத்தப்பட்ட நிலம் குறித்த விபரம் வெளியிடப்படும்.
அவ்வாறு அரசிதழில் வெளியிட்டதும், எத்தகைய வில்லங்கமும் இன்றி, மத்திய அரசிற்கு சொந்தமாகும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த விசாரணை கூட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில், வரும் 19ம் தேதியும், கூவத்துார் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், வரும் 20ம் தேதியும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முழு விபரங்களை, தாலுகா அலுவலகங்களில் பார்வையிடலாம்.