ADDED : மார் 23, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58; ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், உடன் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், 57, என்பவருடன், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்தார்.
அப்போது, ஏனாத்துார் அருகே 'அசோக் லைலாண்ட்' லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருவரும் காயமடைந்தனர். இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், சீனிவாசன் இறந்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.

