/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளம் வக்கீல்களுக்கு சட்ட புத்தகம் வினியோகம்
/
இளம் வக்கீல்களுக்கு சட்ட புத்தகம் வினியோகம்
ADDED : மார் 01, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில், நேற்று நடந்தது.
இதில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், சீனியர் வழக்கறிஞருமான என்.கனகராஜ் பங்கேற்று, வழக்கறிஞர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இளம் வழக்கறிஞர்களுக்கு, 150 சட்ட புத்தகங்களை வழங்கினார். வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.