/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ள சந்தையில் மது விற்பனை ஜோர்
/
கள்ள சந்தையில் மது விற்பனை ஜோர்
ADDED : மே 01, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மே தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக, மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள சாலையில், இருசக்கர வாகனத்தில் வைத்து, கள்ளச் சந்தையில், குவார்ட்டர் மது பாட்டில் 300 ரூபாய் வரை அமோகமாக விற்பனை செய்யப்பட்டது.
காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், வெட்ட வெளிச்சமாக மது விற்பனை செய்யப்பட்டது, பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது.

