/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழ்வழுத்த மின் வினியோகம் கீரப்பாக்கம் ஊராட்சியில் சிரமம்
/
தாழ்வழுத்த மின் வினியோகம் கீரப்பாக்கம் ஊராட்சியில் சிரமம்
தாழ்வழுத்த மின் வினியோகம் கீரப்பாக்கம் ஊராட்சியில் சிரமம்
தாழ்வழுத்த மின் வினியோகம் கீரப்பாக்கம் ஊராட்சியில் சிரமம்
ADDED : ஏப் 02, 2024 01:24 AM
கூடுவாஞ்சேரி, கீரப்பாக்கம் ஊராட்சியில், குறைந்த அழுத்த மின் வினியோகத்தால், அப் பகுதி குடியிருப்புவாசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் முருகமங்கலம், அருங்கால் போன்ற கிராமங்களில், தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகிறோம்.
வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கூட பயன்படுத்த முடியாமல், சிரமம் அடைந்து வருகிறோம்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குறைந்த அழுத்த மின் வினியோகத்தை சரி செய்து, சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

