/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்தழுத்த மின் வினியோகம் மின்சாதன பொருட்கள் பழுது
/
குறைந்தழுத்த மின் வினியோகம் மின்சாதன பொருட்கள் பழுது
குறைந்தழுத்த மின் வினியோகம் மின்சாதன பொருட்கள் பழுது
குறைந்தழுத்த மின் வினியோகம் மின்சாதன பொருட்கள் பழுது
ADDED : ஜூலை 28, 2024 12:54 AM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் உள்ள குடும்பத்தினருக்கு, மலைக்காலனி மற்றும் ஏரிகால்வாய் அருகே இரண்டு மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மின்மாற்றிக்கு, கடுகுப்பட்டு துணைமின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த இரண்டு மின்மாற்றியில், 500க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளதால், காலை மற்றும் இரவு நேரத்தில் குறைந்தஅழுத்தத்தால், 'டிவி' மின்விசிறி, 'ஏசி' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன.
மேலும், இரவு நேரத்தில் மின்விசிறிகள் மெதுவாக இயங்குவதால், போதிய காற்றோட்டம் இன்றி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குளக்கரை பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.