/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடைப்பந்தில் 'ஹாட்ரிக்' கோப்பை வென்ற லயோலா
/
கூடைப்பந்தில் 'ஹாட்ரிக்' கோப்பை வென்ற லயோலா
ADDED : செப் 03, 2024 04:53 AM

சென்னை : லயோலா கல்லுாரியின் நிறுவனர் 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 90வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், 16 அணிகள் பங்கேற்று, 'நாக் அவுட்' முறையில் மோதின.
நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், லயோலா மற்றும் எம்.சி.சி., அணிகள் மோதின. விறுவிறுப்பான முதல் பாதி போட்டியில், லயோலா அணி, 39 - 22 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
முடிவில், லயோலா அணி, 67 - 53 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த வெற்றியால், கூடைப்பந்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லயோலா அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
லயோலா வீரர் அபினேஷ் அதிகபடியாக, 21 புள்ளிகள் குவித்து வெற்றிக்கு கைகொடுத்தார். அடுத்தடுத்த இடங்களை, எம்.சி.சி., அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ், கோவை பி.ஜி.எஸ்., கல்லுாரிகள் அணிகள் பிடித்தன.