/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' சாம்பியன்
/
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' சாம்பியன்
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' சாம்பியன்
லுாகாஸ் டி.வி.எஸ்., கிரிக்கெட் 'வீல்ஸ் இந்தியா' சாம்பியன்
ADDED : ஜூலை 23, 2024 01:32 AM

சென்னை, லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பைக்கான கிரிக்கெட்போட்டி, திருவள்ளூரில் நடந்தது. இதில், பல்வேறு கிரிக்கெட் அகாடமி, கிளப் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் மோதின.
அனைத்து போட்டிகள் முடிவில் அப்பல்லோ டயர்ஸ் - வீல்ஸ் இந்தியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
ஆவடி பட்டாபிராம் பகுதியில், நேற்று முன்தினம் இறுதிப் போட்டி நடந்தது.
டாஸ் வென்ற அப்பல்லோ டயர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில், 26.1 ஓவர்களில்,'ஆல் அவுட்' ஆகி, 80 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய வீல்ஸ் இந்தியா அணி, 16.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 81 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
இத்தொடரில் அதிகபட்சமாக 151 ரன்கள் அடித்த அப்பல்லோ டயர்ஸ் வீரர் மனோஜ், அதிகபட்சமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்திய வீல்ஸ் இந்தியா வீரர் ரவி ஆகியோருக்கு, சிறப்பு பரிசுகள்வழங்கப்பட்டன.