/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
மதுராந்தகம் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 20, 2024 10:42 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தின் கீழ், ஒரத்தி, அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், சித்தாமூர், மதுராந்தகம், சூணாம்பேடு, செய்யூர், அணைக்கட்டு மற்றும் மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட, 10 காவல் நிலையங்கள் உள்ளன.
இதில், வண்டலுார் அருகே ஊனமாஞ்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்த மருத்துவர் மேகலா, மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளராக, நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
இதுவரை பணியில் இருந்த டி.எஸ்.பி., சிவசக்தி, மதுரை அண்ணா நகர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி., மேகலாவுக்கு, இன்ஸ்பெக்டர்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிரிவு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.