/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் பாதிப்பு
/
மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் பாதிப்பு
மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் பாதிப்பு
மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் பாதிப்பு
ADDED : மார் 04, 2025 07:19 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்டு மதுராந்தகம் காவல் நிலையம் உள்ளது.
மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்டு மதுராந்தகம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மதுராந்தகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முத்து குமார், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதனால், மதுராந்தகம் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பணி காலியாக உள்ளது. அதன் காரணமாக, மேல்மருவத்துார் இன்ஸ்பெக்டர், சித்தாமூர் காவல் நிலையம் மற்றும் மதுராந்தகம் காவல் நிலையத்திலும் கூடுதல் பொறுப்பில் பணி புரிந்து வருகிறார்.
அதனால், கூடுதல் பணி சுமை ஏற்படுவதால், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து, விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மேல்மருவத்துார் முதல் மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 20 கி.மீ., துாரத்திற்கு சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், விபத்து காலங்களில், போக்குவரத்தை சீரமைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
எனவே, மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் நியமிக்க, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கிறனர்.