/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு ஷேர் ஆட்டோக்கள் அடாவடியால் வேதனை
/
மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு ஷேர் ஆட்டோக்கள் அடாவடியால் வேதனை
மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு ஷேர் ஆட்டோக்கள் அடாவடியால் வேதனை
மகேந்திரா சிட்டி பஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு ஷேர் ஆட்டோக்கள் அடாவடியால் வேதனை
ADDED : மார் 01, 2025 11:46 PM

மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
இங்கு ஜி.எஸ்.டி., சாலையில் இருபுறமும் பேருந்து நிறுத்தம் உள்ளது.
செட்டிபுண்ணியம், பகத்சிங் நகர், வடகால் கிராம மக்கள் தாம்பரம், சென்னை பகுதிகளுக்குச் சென்று வர, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
'டாடா மேஜிக்'
மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர், தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி மகேந்திரா சிட்டி வந்து செல்கின்றனர்.
மகேந்திரா சிட்டியில் இருந்து ஊரப்பாக்கம் வரை, 'டாடா மேஜிக்' எனப்படும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இதன் டிரைவர்கள் மகேந்திரா சிட்டி பேருந்து நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தி, பயணியரை தொடர்ந்து சவாரி ஏற்றி வருவதால், பேருந்துகளை அந்த நிறுத்தத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், பேருந்து பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து டாடா மேஜிக் வாகனங்கள், கடைகளின் விளம்பர பலகைகள், 'கிரேன்' இயந்திரங்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், லாரி மோதி உயிரிழந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், ஸ்கூட்டரில் சென்ற நபர், தனியார் கல்லுாரி பேருந்து மோதி உயிரிழந்தார்.
நடவடிக்கை
சில மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் சார்பில், சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனாலும், சில நாட்களிலேயே புதிய ஆக்கிரமிப்புகள் முளைத்து விட்டன.
இதன் காரணமாக, பேருந்துகள் பயணியரை நடு சாலையில் இறக்கிவிட்டுச் செல்கின்றன.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு மற்றும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.