/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டிய வீட்டில் ஆண் உடல் மீட்பு
/
பூட்டிய வீட்டில் ஆண் உடல் மீட்பு
ADDED : செப் 09, 2024 11:51 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அண்ணா நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக, அக்கம் பக்கத்தினர் நேற்று காலை செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்த கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கிருபாகரன், 40, என்பவர் உயிரிழந்து, உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், கிருபாகரன் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த வர் என்பது தெரியவந்தது. அவர், செங்கல்பட்டில் உள்ள மாட்டு தீவனம் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மது பழக்கத்திற்கு அடிமையான கிருபாகரன், சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்த போது உயிரிழந்தது தெரியவந்தது. கிருபாகரன் உயிரிழப்பு குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.