/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு
/
மாமல்லை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 20, 2024 08:33 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய கணேஷ் என்பவர், கடந்த மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெற்றார்.
அதன்பின், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலரான அருள்குமார், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கும் கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சிக்கும் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, திருச்சி மாவட்டம், ச.கண்ணனுார் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமாரை, மாமல்லபுரம் பேரூராட்சிக்கு நியமித்து, பேரூராட்சி இயக்குனரகம் உத்தரவிட்டது.
ஆனால், நகராட்சி பகுதியாக தரம் உயர்த்த, அரசு முடிவெடுத்த நிலையில், அவரை நியமித்து ஒரு மாதம் கடந்தும், மாமல்லபுரத்தில் பொறுப்பேற்கவில்லை.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் மாமல்லபுரத்தில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.