/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பூஞ்சேரி சந்திப்பில் படர்ந்துள்ள முட்புதரால் அவதி
/
மாமல்லை பூஞ்சேரி சந்திப்பில் படர்ந்துள்ள முட்புதரால் அவதி
மாமல்லை பூஞ்சேரி சந்திப்பில் படர்ந்துள்ள முட்புதரால் அவதி
மாமல்லை பூஞ்சேரி சந்திப்பில் படர்ந்துள்ள முட்புதரால் அவதி
ADDED : செப் 01, 2024 11:52 PM

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பூஞ்சேரி சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பு வழியே, இப்பகுதி வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி சாலை, பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் சாலைகளில் வாகனங்கள் செல்கின்றன.
இங்கு, புதுச்சேரி சாலை வளையும் இடத்தில், சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர், சாலையின் மைய பகுதி வரை நீண்டுள்ளது.
இப்பகுதியை கடக்கும் இருசக்கர வாகன பயணியர், பஸ், லாரி ஆகிய கனரக வாகனங்களுக்கு வழிவிட முயன்று, ஒதுங்கும்போது, முட்புதரில் சிக்கும் அபாயம் உள்ளது.
குறுகிய இடத்தில், வேறு வழியின்றி ஒதுங்கி, முட்கள் உடலில் கிழிக்கின்றன. இதை தவிர்க்க, சாலை மையத்தில், விபத்து அபாயத்துடன் செல்கின்றனர். இரவில் இருள் சூழ்ந்துள்ள நிலையில், முட்புதரில் விழுந்து அடிக்கடி வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர்.
தானியங்கி சிக்னல், மின் கம்பம் ஆகியவற்றையும் முட்புதர் சூழ்ந்து, அவல நிலையில் உள்ளது.
மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை மேம்பாட்டிற்காக, மேம்பாலம், சாலை இணைப்பு ஆகிய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தேசிய நெடுஞ்சாலைத் துறை, சாலையின் முட்புதரையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.