/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
/
மாமல்லபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : மார் 09, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி, இரண்டாம் நிலை நகராட்சியாக, கடந்த மாதம் தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சி நிர்வாகத்திற்கு கமிஷனர், மேலாளர், பிறர் என, 31 பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்கவேண்டும்.
முதலில், கமிஷனராக, நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சுவீதாஸ்ரீயை நியமித்து, நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசு, பிப்., 25ம் தேதி உத்தரவிட்டார். நேற்று, அவர் கமிஷனராக பொறுப்பேற்றார். செயல் அலுவலர் சந்திரகுமார், நிர்வாக பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.