/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் அங்கன்வாடி புதர் மண்டி அலங்கோலம்
/
மாம்பாக்கம் அங்கன்வாடி புதர் மண்டி அலங்கோலம்
ADDED : ஆக 09, 2024 01:43 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி, 2வது வார்டில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் முன் புதர் மண்டிக் கிடக்கிறது. அதனால், விஷப்பூச்சிகள் வந்து செல்லும் சூழல் நிலவுகிறது.
மேலும், மழைநீர் தேங்கி சகதியாக உள்ளது. இந்த வழியாக வந்து செல்ல, குழந்தைகள் மற்றும் குழந்தைகளை மையத்திற்கு அழைத்து வரும் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால், குழந்தைகளை பெற்றோர்கள் மையத்திற்கு அழைத்து வருவதற்கும், அனுப்புவதற்கும் அச்சம் அடைந்துள்ளனர். அதேபோல், சுற்றுச்சுவரும் அமைக்கப்படவில்லை.
எனவே, மேற்கண்ட அங்கன்வாடி மைய வளாகத்தை துாய்மைப்படுத்தி மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.