/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அவதி
/
மாம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அவதி
மாம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அவதி
மாம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அவதி
ADDED : செப் 05, 2024 11:53 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே புத்திரன்கோட்டை- - மாம்பாக்கம் இடையே, 2.3 கி.மீ., நீளம் உடைய சாலையை, அகரம், ஈசூர், புத்திரன்கோட்டை ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் சிதறி காணப்படுவதால், தினசரி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
சேதமடைந்த இந்த சாலை, சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பின், செங்கல்பட்டு நெடுஞ்சாலை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசுக்கு, நெடுஞ்சாலைத் துறை சார்பாக கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு, சாலையை சீரமைக்க, கடந்த ஆண்டு ஜன., 30ம் தேதி, 3.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சில மாதங்களுக்கு முன், சாலை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டு, சாலை அமைக்காமல் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.