/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது
/
10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது
ADDED : ஜூன் 25, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டத்தில், போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை ஆறு பெண்கள் உள்பட 15 பேரை கைது செய்தனர். இதில், 70 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டரவேடு காலனி பகுதியில் நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல், 47, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 10 லிட்டர்கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.