/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியவர் கைது
/
மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்தியவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 01:39 AM
சென்னை:தண்டையார்பேட்டையிலிருந்து மெட்ரோ ரயிலில் தேனாம்பேட்டை செல்லும் போதுபுவனேஷ், 24, என்பவர்,கஞ்சா பயன்படுத்திஉள்ளார். இதை சக பயணி ஒருவர், அவரது மொபைல் போனில் வீடியோ பதிவு, செய்து சமூக வலை தளத்தில் பதிவேற்றம்செய்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். சென்னையில் கஞ்சா புழக்கம்அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு நிலை சீர்கெட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய புவனேஷ், 24, என்பவரை அடையாளம் கண்டு நேற்று கைது கைது செய்தனர்.
கைதான புவனேஷ் மீது காசிமேடு காவல் நிலையத்தில், கொலைமிரட்டல், திருட்டுஉள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.