/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு பள்ளிகளில் மேலாண் குழுவினர் தேர்வு
/
செங்கை அரசு பள்ளிகளில் மேலாண் குழுவினர் தேர்வு
ADDED : ஆக 24, 2024 09:40 PM
மாமல்லபுரம்:ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில், பள்ளி மேம்பாட்டு திட்டமிடலுக்காக, பள்ளிதோறும் பள்ளி மேலாண்மை குழு செயல்படுகிறது.
இந்த குழுவிற்கு தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, குழுவினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நடப்பு 2024 - 2026ம் ஆண்டிற்கான குழுவினரை தேர்ந்தெடுக்க, முன்னதாக மாணவர் பெற்றோருடன் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தேர்தல் நடத்தி, குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளில், தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

