/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி கட்டடத்தில் இயங்கும் மணப்பாக்கம் சுகாதார நிலையம்
/
அங்கன்வாடி கட்டடத்தில் இயங்கும் மணப்பாக்கம் சுகாதார நிலையம்
அங்கன்வாடி கட்டடத்தில் இயங்கும் மணப்பாக்கம் சுகாதார நிலையம்
அங்கன்வாடி கட்டடத்தில் இயங்கும் மணப்பாக்கம் சுகாதார நிலையம்
ADDED : ஆக 12, 2024 03:46 AM

சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த துணை ஆரம்ப சுகாதார நிலையத்தால், அரசூர், வன்னியநல்லுார், வெண்ணந்தல் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும், 2,000த்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இங்கு, கர்ப்பிணியருக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. மேலும், சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி போன்ற நோய்களுக்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.
முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்ததால், தற்போது அங்கன்வாடி மையத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, போதிய இடவசதி இல்லாமல், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதிவாசிகள் நலனை கருத்தில் கொண்டு, சேதமடைந்துள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.