/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பால் கொள்முதல் நிலையம் கட்டட பணிகள் துவக்கம்
/
பால் கொள்முதல் நிலையம் கட்டட பணிகள் துவக்கம்
ADDED : மார் 07, 2025 01:21 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் உள்ள கீழ்ப்பட்டு, மின்னல், கீழ் மின்னல் உள்ளிட்ட குக்கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழில்.
அதனால், பால் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி, கிராமவாசிகள் தொடர்ந்து, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வாயிலாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 2024- - 25ம் நிதியாண்டில், 20.65 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க கொள்முதல் நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, தொழுப்பேடு -- ஒரத்தி மாநில நெடுஞ்சாலையில், நியாய விலை கடை அருகே, பால் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.