/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்னல்சித்தாமூர் - நெடுங்கால் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
மின்னல்சித்தாமூர் - நெடுங்கால் சாலையை சீரமைக்க கோரிக்கை
மின்னல்சித்தாமூர் - நெடுங்கால் சாலையை சீரமைக்க கோரிக்கை
மின்னல்சித்தாமூர் - நெடுங்கால் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 05:54 AM

அச்சிறுபாக்கம்: மின்னல் சித்தாமூர் -- நெடுங்கால் செல்லும் கிராம சாலையில், பள்ளங்கள் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதால், பள்ளங்களை சமன் செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரத்தி- - தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில், மின்னல் சித்தாமூர் பகுதியில் இருந்து பிரிந்து, நெடுங்கால் ஊராட்சிக்கு செல்லும் கிராம சாலை உள்ளது.
இந்த சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, மின்னல் சித்தாமூர் பகுதியில் இருந்து மயானம் வரை, சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியும், சாலையை பயன்படுத்த முடியாதவாறு உள்ளது.
மிதிவண்டி பயன்படுத்தி பள்ளிக்கு சென்றுவரும் மாணவ - மாணவியர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையில் உள்ள பள்ளங்களால் அடிக்கடி சிறுசிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.