/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஊரப்பாக்கத்தில் அபாயம்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஊரப்பாக்கத்தில் அபாயம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஊரப்பாக்கத்தில் அபாயம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஊரப்பாக்கத்தில் அபாயம்
ADDED : ஜூலை 04, 2024 10:02 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம்ஊராட்சி பிரியா நகர் விரிவு ஐந்து பகுதியில் உள்ள முதலாவது தெருவில், 25 வீடுகள் உள்ளன.
இந்த பகுதிக்கு, ஊராட்சி சார்பில், பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக, இங்கு வழங்கப்பட்டு வந்த குடிநீரில் கழிவுநீர் கலந்துதுர்நாற்றம் வீசுகிறது
அதனால், அந்த நீரை உபயோகப்படுத்த முடியாமல், அப்பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக, ஊரப்பாக்கத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இப்பகுதிக்கு, தினமும் காலை ஒரு மணி நேரம் குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது.
குடிநீர் கருப்புவண்ணத்தில், சாக்கடை நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. மேலும், அதை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து, ஊராட்சி செயலருக்கு புகார்தெரிவித்தோம். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, எங்கள் பகுதிக்கு, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.