/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் மீது தாக்குதல் தாய்மாமன்கள் கைது
/
பெண் மீது தாக்குதல் தாய்மாமன்கள் கைது
ADDED : செப் 01, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த மணமையைச் சேர்ந்த சுதேவன் மனைவி ராஜேஸ்வரி, 42. ராஜேஸ்வரியின் கணவர், பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
அவரது குடும்பத்தை, அவரது தாய்மாமன்கள் மனோகரன், 56, ரவிச்சந்திரன், 44, பராமரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரி வசித்து வந்த வீடு தொடர்பாக, நேற்று முன்தினம் ராஜேஸ்வரி மற்றும் தாய்மாமன்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், தாய்மாமன்கள் இருவராலும் தாக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு, காதில் கம்மல் அறுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசில் அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் தாய்மாமன் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.