/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சின்னம்மாபேட்டையில் பேனர் விழுந்து தாய், மகன் காயம்
/
சின்னம்மாபேட்டையில் பேனர் விழுந்து தாய், மகன் காயம்
சின்னம்மாபேட்டையில் பேனர் விழுந்து தாய், மகன் காயம்
சின்னம்மாபேட்டையில் பேனர் விழுந்து தாய், மகன் காயம்
ADDED : செப் 11, 2024 12:47 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில், பேருந்து நிறுத்தம் எதிரில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை விழுந்ததில் தாய், மகன் காயம் அடைந்தனர்.
சின்னம்மாபேட்டையை சேர்ந்த இளைஞரணி பொறுப்பாளர்கள், புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் மூர்த்தி மறைவை அனுசரிக்கும் விதமாக, சின்னம்மாபேட்டை ரயில் நிலையம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளில், அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர்.
பேருந்து நிறுத்தம் எதிரில் இருந்த விளம்பர பதாகை, நேற்று காலை திடீரென காற்றில் சரிந்தது. அப்போது, டி.வி.எஸ்., அப்பாச்சி இருசக்கர வாகனத்தில், ரயில் நிலையம் நோக்கி சென்ற சந்தோஷ், 25, மற்றும் அவரது தாய் நீலவேணி, 43, மீது, விளம்பர பதாகை விழுந்தது.
விளம்பர பதாகை நிறுத்த அமைக்கப்பட்ட ரீப்பர் கட்டை சந்தோஷ் தலையில் விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தலையில் 8 தையல் போடப்பட்டது. அவரது தாய், லேசான காயங்களுடன் தப்பினார்.
அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவது தொடர்கிறது.
பேனர் வைக்க உரிய கட்டுப்பாடு மற்றும் அனுமதியின்றி வைப்போர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.