/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திரு ப்போரூர் பிரணவமலையில் மின்மோட்டார் பழுது சீரமைப்பு
/
திரு ப்போரூர் பிரணவமலையில் மின்மோட்டார் பழுது சீரமைப்பு
திரு ப்போரூர் பிரணவமலையில் மின்மோட்டார் பழுது சீரமைப்பு
திரு ப்போரூர் பிரணவமலையில் மின்மோட்டார் பழுது சீரமைப்பு
ADDED : ஆக 05, 2024 12:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அடிவாரத்தின் அருகே, பொதுகிணறு உள்ளது.
இந்த கிணற்றிலிருந்து மேற்கண்ட கோவிலுக்கும், அதன் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்திற்கும், மின் மோட்டார் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக, கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்து இருந்தது. அதனால், கோவில் மற்றும் பள்ளியில் குடிநீர் வசதியின்றி, பக்தர்களும் மாணவ - மாணவியரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அப்பகுதியின் 8வது வார்டு கவுன்சிலர் குமரன் அரசு மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பழுதான மின் மோட்டாரை சீரமைக்கக்கோரி, பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தனர்.
அதை தொடர்ந்து, நேற்று பணியாளர்கள் வாயிலாக கிணற்றின் மின் மோட்டார் பழுது நீக்கி சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.