/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகரம்தென் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பீதி
/
அகரம்தென் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பீதி
அகரம்தென் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பீதி
அகரம்தென் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பீதி
ADDED : ஜூலை 15, 2024 01:43 AM

சேலையூர்:தாம்பரம் - வேளச்சேரி சாலையில், கேம்ப்ரோடு சந்திப்பில் இருந்து பிரிந்து செல்கிறது, அகரம்தென் சாலை. கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், கனரக வாகனங்கள், பேருந்துகள், கார், வேன் என தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
கல்வி நிலையங்கள், குடியிருப்புகளின் அதிகரிப்பால், பொதுமக்களின் வசதிக்காக, இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்க இடங்களில், ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், இச்சாலையில் மாடுகளின் தொல்லையும் பெருகிவிட்டது. கூட்டம் கூட்டமாக திரியும் இவை, சாலையின் நடுவில் ஆங்காங்கே படுத்துக் கொள்கின்றன.
இதனால், இச்சாலையில் தினமும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், மாடுகள் படுத்திருப்பது தெரியாமல், அவற்றின் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர். இதேபோல், பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையிலும் மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.