/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மோசமான பாலுார் சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
மோசமான பாலுார் சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 31, 2024 11:45 PM

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே பாலுார் கிராமத்தில், அணைக்கட்டு சாலையையும், கூவத்துார் சாலையையும் இணைக்கும், 3 கி.மீ., தார் சாலை உள்ளது. இந்த சாலையை, பாலுார், பச்சம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
அதனால், தினசரி பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், விவசாயப் பணிக்கு செல்லும் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
சாலையில் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்களால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை சேதமடைந்து பயன்படுத்த லாயக்கற்றதாக மாறி உள்ள சாலையை, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.