/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலாவதியான மருந்துகளை கிணற்றில் வீசிய மர்மநபர்கள்
/
காலாவதியான மருந்துகளை கிணற்றில் வீசிய மர்மநபர்கள்
ADDED : செப் 04, 2024 01:16 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், சிலாவட்டம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் பயன்பாடின்றி, பாழடைந்த விவசாய கிணறு உள்ளது.
இந்த கிணற்றில் ஹோட்டல் கழிவுகள்மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளை மூட்டைகளில் கொண்டு வந்து, அப்பகுதியினர் கொட்டி வந்தனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
தற்போது, காலாவதியான மாத்திரை, மருந்துகள், டானிக் உள்ளிட்ட வைகளையும் மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டிச்சென்றுள்ளனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காலாவதியான மருந்துகளை கிணற்றில் கொட்டிச் சென்ற மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையோரத்தில் திறந்தவெளியில் உள்ள கிணற்றுக்கு தடுப்பு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.