/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒப்பந்ததாரருக்கு வழங்கிய பணி ஆணையில் பெயர் குழப்பம்
/
ஒப்பந்ததாரருக்கு வழங்கிய பணி ஆணையில் பெயர் குழப்பம்
ஒப்பந்ததாரருக்கு வழங்கிய பணி ஆணையில் பெயர் குழப்பம்
ஒப்பந்ததாரருக்கு வழங்கிய பணி ஆணையில் பெயர் குழப்பம்
ADDED : ஆக 04, 2024 09:16 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி கமிஷனராக இருந்த சவுந்தரராஜன், கடந்த மார்ச் மாதம் பதவி உயர்வுடன் மாறுதலாகி சென்றார். இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி மண்டல உதவி கமிஷனராக இருந்த சகிலா என்பவர், கடந்த மார்ச் மாதம் முதல் பொறுப்பு நகராட்சி கமிஷனராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும் பணி ஆணை பலவற்றில், நகராட்சி கமிஷனர் பெயர் சசிகலா என, தவறுதலாக அச்சிடப்பட்டு உள்ளது.
அவற்றில், கையெழுத்திட்டு, நகராட்சி கமிஷனர் சகிலா ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியுள்ளார்.
இதே போல, சில வாரங்களுக்கு முன், நகராட்சி பொறியியல் பிரிவில், கழிவு நீர் இணைப்பு இல்லாத வீட்டிற்கு கட்டணத் தொகை விதிக்கப்பட்டது. பெண் அதிகாரி ஒருவர், ஆய்வு செய்யாமல் கட்டணத் தொகை விதித்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டின் உரிமையாளர் நகராட்சி அலுவலகம் வந்து முறையிட்ட பின்னரே, அதிகாரிக்கு விபரம் தெரியவந்தது.
இதுபோல, நகராட்சி அதிகாரிகள் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் கோப்புகளில் கையெழுத்து இடுவதாக, அ.தி.மு.க.,வினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, மறைமலை நகர் நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.