/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது?
/
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது?
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது?
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது?
ADDED : ஏப் 18, 2024 08:28 PM
கூடுவாஞ்சேரி,:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் துவங்கப்பட வேண்டும். அவ்வாறு துவங்கும்பட்சத்தில், மழை காலங்களில் மழைநீர் தெருவுக்குள் புகுந்து, வெள்ள சேதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
எனவே, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கும் விதமாக, பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
மறைமலை நகர் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு விட்டது. அருகில் உள்ள நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிக்கும்விரிவுபடுத்த வேண்டும். விரைவில் பணிகளை துவங்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், வரும் மழைக்காலத்தில் பாதிப்புகளை ஓரளவிற்கு தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, நகராட்சி துணைத் தலைவர் லோகநாதன் கூறியதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்து, இப்பணிகளை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, பாதாள சாக்கடை திட்டம் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

