/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் தேசிய 'சர்பிங்' போட்டி
/
மாமல்லையில் தேசிய 'சர்பிங்' போட்டி
ADDED : ஜூலை 29, 2024 10:54 PM
மாமல்லபுரம் : தமிழ்நாடு அலைசறுக்கு விளையாட்டு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, மாமல்லபுரத்தில் அலைசறுக்கு - சர்பிங் போட்டிகள் நடத்துகின்றன. இந்தியா சார்பில்பங்கேற்க, 10 ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களைதேர்வு செய்ய, தேசிய அளவிலான தகுதி போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம், கேரள மாநிலம் வர்கலாவிலும், அடுத்ததாக, ஜூன் மாதம், கர்நாடக மாநிலம் மங்களூருவிலும், தேசிய தகுதி போட்டிகள் நடத்தப்பட்டன. மாமல்லபுரத்தில், 'மஹாப்ஸ் பாயின்ட் பிரேக் சேலஞ்ச்' என, ஆக., 1, 2ம் தேதிகளில், போட்டிகள்நடத்தப்பட உள்ளன.
இறுதிப்போட்டி, 'கோவலாங் கிளாசிக்' என்ற பெயரில், ஆக., 8, 9, 10ம் தேதிகளில்,கோவளத்தில் நடத்தப் படுகிறது.