/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெற்குணம் சாலை சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
நெற்குணம் சாலை சேதம் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 28, 2024 11:32 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே கோட்டைபுஞ்சை கிராமத்தில் இருந்து, நெற்குணம் கிராமத்திற்கு செல்லும்3 கி.மீ., தார் சாலைஉள்ளது.
இந்த சாலையை, புத்த மங்கலம், துாதுவிளம்பட்டு, ஆயக்குன்னம், நெற்குணம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும்பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல, இதுவே பிரதான சாலையாக உள்ளது.
பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் என, தினசரிஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை, கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துஉள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து, மேலும் சேதமடைகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையைசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.