/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் விடுதி கற்கள் குவிப்பு நெம்மேலி மீனவர்கள் எதிர்ப்பு
/
தனியார் விடுதி கற்கள் குவிப்பு நெம்மேலி மீனவர்கள் எதிர்ப்பு
தனியார் விடுதி கற்கள் குவிப்பு நெம்மேலி மீனவர்கள் எதிர்ப்பு
தனியார் விடுதி கற்கள் குவிப்பு நெம்மேலி மீனவர்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 29, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவ பகுதி அருகில், தனியார் விடுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பால், விடுதி கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு விடுதி நிர்வாகத்தினர், கடலரிப்பு பாதிப்பை தவிர்க்க, விடுதியை ஒட்டிய கடற்கரையில், நேற்று பாறைக்கற்களை குவிக்கத் துவங்கினர்.
கற்கள் குவிப்பதால், தங்கள் பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய மீனவர்கள், கற்கள் குவிப்பதை தடுத்து நிறுத்தினர். மேலும், அதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர்.