/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காரில் ரூ.4.50 லட்சத்துடன் பறந்த மோசடி ஆசாமிக்கு வலை
/
காரில் ரூ.4.50 லட்சத்துடன் பறந்த மோசடி ஆசாமிக்கு வலை
காரில் ரூ.4.50 லட்சத்துடன் பறந்த மோசடி ஆசாமிக்கு வலை
காரில் ரூ.4.50 லட்சத்துடன் பறந்த மோசடி ஆசாமிக்கு வலை
ADDED : ஜூன் 20, 2024 10:41 PM
கூடுவாஞ்சேரி:மேடவாக்கம் விஜய நகரம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம், 37.
இவரை, பெங்களூருவைச் சேர்ந்த நியாஸ் என்பவர், 'செங்கல்பட்டில் குறைந்த விலையில் இடம் இருப்பதாகவும், முன் பணத்துடன் வருமாறும்' கூறியுள்ளார்.
இடம் வாங்கும் ஆசையில் இருந்த வள்ளிநாயகம், இடத்தை முன் பதிவு செய்வதற்காக, அவரது தம்பி கார்த்திக்குடன் 4.50 லட்சம் ரூபாயைஎடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, தாம்பரம் பகுதியில் சொகுசு காரில் நின்ற நியாஸ், இடத்தை காட்டுவதாக கூறி, அவர்களை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
காரை நியாஸின் டிரைவர்ஓட்டியுள்ளார். சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையோரம் நிறுத்தி டீ அருந்தி செல்லலாம் என, நியாஸ் கூறியுள்ளார்.
பணப் பையை காரில் வைத்து, மூவரும் இறங்கி டீ அருந்தினர். விரைவாக டீ குடித்து முடித்த நியாஸ், வேகமாக காரில் ஏறிபறந்து விட்டார்.
அதிர்ச்சியடைந்த வள்ளிநாயகம், நியாஸின் மொபைல் போனுக்கு தொடர்புகொண்டபோது, அது 'சுவிட்ச் ஆப்' செய்யப் பட்டிருந்தது.
புகாரின்படி கூடுவாஞ் சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.