/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மணமை, நத்தமேடு பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள்
/
மணமை, நத்தமேடு பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள்
மணமை, நத்தமேடு பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள்
மணமை, நத்தமேடு பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள்
ADDED : ஏப் 26, 2024 08:48 PM
மாமல்லபுரம்,:மாமல்லபுரம் அடுத்த மணமை, கல்பாக்கம் அடுத்த நத்தமேடு ஆகிய பகுதிகளில், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, சென்னை அணுமின் நிலையத்திடம், மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது.
அணுமின் நிலைய நிர்வாகம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தில், தலா 24 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டடம் கட்டி, சுற்றுச்சுவர் அமைத்து, விளையாட்டு சாதனங்கள் அமைத்தது. நிலைய இயக்குனர் சுதிர் பி.ஷெல்கே, அவற்றை பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நான் அலுவலக விஷயமாக மட்டுமே, மொபைல் போனை பயன்படுத்துகிறேன். வேறு எதற்கும், அதை பயன்படுத்துவதில்லை.
வீட்டுப் பணிகளை செய்ய, பெரியவர்கள் குழந்தைகளிடம் மொபைல் போனை அளிக்கின்றனர். இது மிகவும் தவறு. குழந்தைகளின் போக்கை அது மாற்றி விடுகிறது.
மொபைல் போன் பார்க்கும் பழக்கத்தை அனுமதிக்காமல், அவர்கள் அங்கன்வாடியில் அதிகநேரம் இருக்குமாறு பழக்கப் படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிலைய மனித வள பொது மேலாளர் வாசுதேவன், சமூக பொறுப்புக் குழு உறுப்பினர் செயலர் ஜெகன், ஊராட்சித் தலைவர்கள் மணமை செங்கேணி, வெங்கப்பாக்கம் வேண்டாமிர்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

