/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய அங்கன்வாடி மையம் ரூ.13 லட்சத்தில் திறப்பு
/
புதிய அங்கன்வாடி மையம் ரூ.13 லட்சத்தில் திறப்பு
ADDED : ஜூன் 11, 2024 04:00 PM
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாபுராயன்பேட்டை ஊராட்சியில், புதிய அங்கன்வாடி மையம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த மையத்தில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிதாக அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கி, அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஊராட்சி தலைவர் நவநீதம் முன்னிலை வகித்தார். விழாவில், அங்கன்வாடி பணியாளர்கள், துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.