/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக சிமென்ட் கல் சாலை; முத்துவிநாயகபுரத்தில் அமைப்பு
/
புதிதாக சிமென்ட் கல் சாலை; முத்துவிநாயகபுரத்தில் அமைப்பு
புதிதாக சிமென்ட் கல் சாலை; முத்துவிநாயகபுரத்தில் அமைப்பு
புதிதாக சிமென்ட் கல் சாலை; முத்துவிநாயகபுரத்தில் அமைப்பு
ADDED : ஆக 20, 2024 01:29 AM

செய்யூர் : சித்தாமூர் அடுத்த கயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துவிநாயகபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் - போந்துார் சாலையில் இருந்து, குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது.
பல ஆண்டுகளாக, சாலை வசதி இல்லாமல், மழைக் காலங்களில் பாதையில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சாலை அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர் என, நம் நாளிதழில் கடந்த மார்ச் மாதம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 117 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.