/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணுமின் நிலையத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்
/
அணுமின் நிலையத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்
ADDED : ஏப் 28, 2024 02:03 AM

கல்பாக்கம்:மும்பையை தலைமையகமாக கொண்டு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் எனப்படும் இந்திய அணுமின் கழகம் என்ற பொதுத்துறை நிறுவனம் செயல்படுகிறது. அதன்கீழ், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது.
இங்கு, தலா 220 மெகா வாட் மின்திறனில், இரண்டு உற்பத்தி அலகுகள் உள்ளன. முதல் அலகு தொழில்நுட்ப கோளாறால், ஐந்து ஆண்டுகளாக முடங்கி, இரண்டாம் அலகு மட்டும் இயங்குகிறது.
இந்நிலைய இயக்குனராக சுதிர் பி. ஷெல்கே, கடந்த 2022 செப்., முதல் பணியாற்றினார். பதவி உயர்வில், மும்பை தலைமையகத்தில், மனிதவள பிரிவின் செயல் இயக்குனராக, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம், நிலைய நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தி, மும்பைக்கு வழியனுப்பினர். கர்நாடக மாநிலம், கைகா அணுமின் நிலைய முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றும் சேைஷயா, பதவி உயர்வில் சென்னை அணுமின் நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

