/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நியூ பிரின்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
நியூ பிரின்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 09, 2024 12:32 AM
சென்னை:ஆதம்பாக்கம் மற்றும் உள்ளகரத்தில் செயல்படும் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 281 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் பிரசன்னா கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் 100க்கு 100 பெற்று, 600க்கு 595 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
மாணவி ஹேம தீபிகா, மூன்று பாடங்களில் 100க்கு 100 பெற்று 583 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
மாணவர் கிளமென்ட் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்று, 581 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
உள்ளகரத்தில் உள்ள நியூபிரின்ஸ் பள்ளியில், மாணவி ரம்யா இரண்டு பாடங்களில் 100க்கு 100 பெற்று 567 மதிப்பெண்களும், புவனா 565 மதிப்பெண்களும், முகேஷ் 561 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இந்த இரு பள்ளிகளிலும், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நியூ பிரின்ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் லோகநாதன், செயலர் மகாலட்சுமி, பள்ளி முதல்வர் அமுதா, துணை தலைவர் நவீன் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.