/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுமண பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை
/
புதுமண பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை
ADDED : ஆக 29, 2024 09:37 PM
மறைமலை நகர்:விழுப்புரம் மாவட்டம், பிள்ளூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல், 47, என்பவர் மகள் யோகேஷ்வரி, 22. கடந்த இரண்டு வருடங்களாக, சிங்கபெருமாள் கோவிலில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், ஐந்து மாதங்களுக்கு முன், யோகேஷ்வரிக்கும் அவரது உறவினரான கணேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, சிங்கபெருமாள் கோவில் மண்டபத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாக கூறப்படுகிறது.
நேற்று காலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேஷ், யோகேஷ்வரி மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், யோகேஷ்வரி உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தன் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, வடிவேல் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணம் ஆன ஐந்து மாதத்திலேயே பெண் இறந்துள்ளதால், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.