/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நித்ய கல்யாண பெருமாள் கோலாகல தெப்போற்சவம்
/
நித்ய கல்யாண பெருமாள் கோலாகல தெப்போற்சவம்
ADDED : மே 03, 2024 11:27 PM

மாமல்லபுரம்,:மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா இறுதியில், சுவாமி தெப்போற்சவம் காண்பார்.
உற்சவ விழா ஏப்., 23ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்தது. சுவாமி, தினசரி காலை, இரவு உற்சவங்களுக்கு பின், வீதியுலா சென்றார்.
ஏப்., 27ம் தேதி கருட சேவையாற்றி, ஏப்., 30ம் தேதி திருத்தேரில் உலா சென்றார். இறுதி நாளான நேற்று முன்தினம், காலை திருமஞ்சனம், பகலில் துவாதச ஆராதனம், புஷ்பயாகம் நடந்தது.
இரவு, சுவாமி தேவியருடன் தீர்த்தகுளம் அடைந்து, தெப்பத்தில் எழுந்தருளினார். வழிபாட்டிற்கு பின், ஒன்பது சுற்றுகள் வலம் வந்து உற்சவம் கண்டார்.
பின், வீதியுலா சென்று கோவிலை அடைந்தார். நேற்று, விடையாற்றி உற்சவம் துவங்கி, நாளை வரை நடக்கிறது. நாளை வராக ஜெயந்தி உற்சவமும் நடக்கிறது.