/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணிடம் பணம் திருட்டு வடமாநில பெண்கள் கைது
/
பெண்ணிடம் பணம் திருட்டு வடமாநில பெண்கள் கைது
ADDED : செப் 12, 2024 01:43 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 48. நேற்று பகல் 12:45 மணிக்கு, மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், அவரது சேமிப்பு கணக்கிலிருந்து, 55,000 ரூபாய் பெற்றார்.
வங்கி நுழைவாயிலை கடந்தபோது, வடமாநில பெண்கள் மூன்று பேர் வழியை மறித்து நின்றுள்ளனர். அவர் வழிவிடுமாறு, அவர்களை தள்ளிவிட்டு வெளியேறினார்.
வெளியே சென்றபின், பணம் வைத்திருந்த பையை பார்த்தபோது, பணத்தை காணவில்லை. அந்த பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, மீண்டும் வங்கிக்கு சென்று கூச்சலிட்டதைக் கண்டு, அவர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.
அங்கிருந்தவர்கள் அவர்களின் பையில் சோதனை செய்தபோது, அதில் ஒருவரின் கைப்பையில் பணம் இருந்ததைக் கண்டு, அவர்களை மாமல்லபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
மஞ்சுளா அளித்த புகாரின்படி, அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அதில், மத்திய பிரதேச மாநிலம், ராஜ்பேட் ஜில்லா, ஜான்டுகேடி பகுதியைச் சேர்ந்த பர்வீனா, 40, பூஜா, 35, நிஷா, 35, ஆகியோர் என்பதும், அவ்வப்போது சென்னை வந்து, வங்கி பகுதிகளில் பணம் எடுத்து வருவோரிடம் திருடுவதும் தெரிந்தது.
மாமல்லபுரத்திற்கு முதல்முறையாக வந்து திருடி பிடிபட்டுள்ளனர். போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.