/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்பனை வடமாநில வாலிபர் கைது
/
கஞ்சா விற்பனை வடமாநில வாலிபர் கைது
ADDED : பிப் 26, 2025 12:07 AM

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வட மாநில தொழிலாளர்களிடம் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர், ஒடிசாவைச் சேர்ந்த மன்றி பெஹாரா, 25, என்பதும், ஒடிசாவிலிருந்து ரயில் வாயிலாக 10 கிலோ கஞ்சா கடத்தி வந்து, கூடுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர் வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.