/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆத்துாரில் வீடுகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள் மறுப்பு: சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு

ADDED : ஆக 18, 2024 12:36 AM

செங்கல்பட்டு:சென்னை -- கன்னியகுமாரி தடத்தில், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையை, 448 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, 2018ம் ஆண்டு, நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
செங்கல்பட்டு -- வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணி, 2020ல் துவங்கி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவர்களுக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்கியது. ஆனாலும், வீடுகளை காலி செய்யாமல், அதே இடத்தில் வசித்து வருகின்றனர்.
இதனால், சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்கி பலத்த காயம் அடைகின்றனர்.
பாலாற்றங்கரை பகுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கு செல்லாமல், அதே இடத்தில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
சாலை பணிகளை விரைந்து முடிக்க, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்த-னர். இந்த மனு மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.