/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி
/
ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி
ADDED : மார் 29, 2024 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75. நேற்று முன்தினம் மாலை, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, அப்பகுதி ஏரியில் அவரது உடல் மிதந்ததைக் கண்ட அப்பகுதியினர், அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து, மகன் பொன்குமார், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

