ADDED : செப் 03, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் : மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள கடப்பேரி ரயில் மேம்பாலத்தின் கீழ், ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், தண்டவாளத்தில் இருந்தது.
நேற்று காலை, ரயில் ஏறுவதற்கு அந்த வழியாக சென்றவர்கள், சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மதுராந்தகம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.