/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., தரைப்பாலம் விரிசலால் போக்குவரத்துக்கு தடை
/
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., தரைப்பாலம் விரிசலால் போக்குவரத்துக்கு தடை
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., தரைப்பாலம் விரிசலால் போக்குவரத்துக்கு தடை
ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., தரைப்பாலம் விரிசலால் போக்குவரத்துக்கு தடை
ADDED : அக் 21, 2024 01:25 AM

துரைப்பாக்கம்:ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் வகையில், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் பகுதியில், பகிங்ஹாம் கால்வாயில், 10 அடி அகலம், 50 அடி நீளத்தில் தரைப்பாலங்கள் உள்ளன.
ஓ.எம்.ஆரில் இருந்து துரித பயணத்திற்கு, இந்த பாலம் வழியாக செல்கின்றனர். பாலத்தில், ஒரு கார் மட்டும் செல்லும் வகையில், ஒரு வழிபாதையாக உள்ளது. பக்கவாட்டில் பாதசாரிகள் நடக்க நடைபாதை உள்ளது.
இந்நிலையில், துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரை நோக்கி செல்லும், பாண்டியன் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் விரிசல் விழுந்துள்ளது.
வாகனங்கள் சென்றால், பெரிய அளவில் விபத்து ஏற்படும் என்பதால், பாலத்தில் தடுப்பு அமைத்து, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, ஓ.எம்.ஆரில் இருந்து நீலாங்கரை நோக்கி செல்வோர், பாலவாக்கம் மற்றும் வெட்டுவாங்கேணி பாலம் வழியாக செல்ல வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.
தரைப்பாலத்தை, நீர்வளத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். சீரமைப்பதா அல்லது இடித்துவிட்டு புது பாலம் கட்டலாம் என, அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.